தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

3 comments:

  1. மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது தீபாவளி கவிதை மிக அருமைங்க!தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.என paramesdriver // tnsfthalavady.blogspot.com // tnsfsathy.blogspot.com

    ReplyDelete
  2. verygood guper happydeepavali

    ReplyDelete

உங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்